×

தொழில்நுட்ப மையம் திட்டம் தொடக்கம்

 

சிவகங்கை, ஜூலை 14: சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐல் தொழில் நுட்ப மையம் 4.0 திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகங்கை முத்துப்பட்டி மற்றும் காரைக்குடி அமராவதிபுதூர் அரசு ஐடிஐக்களில் தலா ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.0தொழில்நுட்ப மையத்தினை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முத்துப்பட்டி அரசு ஐடிஐல் நடந்த இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷாஅஜித் குத்து விளக்கேற்றினார். நிலைய மேலாண்மை குழுத் தலைவர் உத்தண்டி, அரசு ஐடிஐ முதல்வர் வெங்கட கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஐடிஐ மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தொழில்நுட்ப மையம் திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga Muthupatti ,Government ,Center ,Inauguration ,Technology Center Project Inauguration ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா