×

சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா

சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்.25ல் துவங்கி நடந்த ஒரு மாத பயிற்சியில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெற்றது. இதில் 90 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறனர். நிறைவு விழாவிற்கு சிவகங்கை கால்பந்து கழக செயலர், பயிற்றுனர் சிக்கந்தர் தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்ற விளையாட்டு அலுவலர் பிரிட்டன், வழக்கறிஞர் காளிதாஸ், நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவகர், மருத்துவத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். திமுக அயலக அணி மாவட்ட தலைவர் தலைவர் கேப்டன் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். இதில் கவுன்சிலர் மகேஷ் மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Football Club ,Sivagangai Mannar High School ,District Sports Ground ,Sivagangai summer football ,Dinakaran ,
× RELATED குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்