×

முன்னாள் அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது பால்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் நாசர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்த நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீர் வயிற்று வலி காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆவடி நாசர் அனுமதிக்கப்பட்டார். அங்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post முன்னாள் அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Former minister ,Nasser ,Chennai ,M.K.Stalin ,Chief Minister ,Tamil Nadu ,Former ,Minister ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...