×

சூலூர் சமத்துவ மயானத்திற்கு குடிநீர் இணைப்பு போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க திட்டம்

 

கோவை, ஜூலை 7: கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் போதை தடுப்பு மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 18 வயதிற்குட்பட்ட போதை பழக்கம் உள்ள சிறார்களுக்கு கவுன்சிலிங், சிகிச்சை, மறு வாழ்வுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சென்னை, திருச்சியிலும் இதுபோன்ற போதை தடுப்பு மையம் துவக்கப்படவுள்ளது. கோவையில் அமைக்கப்படும் மையத்திற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட சிறார் சிலர் கஞ்சா, மது, போதை மாத்திரை பழக்கத்தில் இருப்பதாக புகார் கிடைத்துள்ளது. சிலர் போதை பழக்கத்தினால் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள். பள்ளி இடை நின்ற மாணவர்கள் குறித்த ஆய்வின் போது சில மாணவர்கள் போதை பழக்கத்தால் பள்ளி செல்லாமல் இருக்கும் தகவல் கிடைத்தது.

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு போலீசாரால் நடவடிக்கை்கு ஆளான சிறார்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது சிலர் போதை பழக்கத்தினால் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த போதை தடுப்பு மையத்தில் சிறார்களுக்கு உரிய சிகிச்சை ஆலோசனை வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வு வழங்க முடியும் என சமூக நலத்துறையினர் தெரிவித்தனர்.

The post சூலூர் சமத்துவ மயானத்திற்கு குடிநீர் இணைப்பு போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Sulur ,Mayan ,Coimbatore ,Department of Social Welfare ,Samattuva ,Dinakaran ,
× RELATED குளத்தில் முதியவர் சடலம் மீட்பு