×

வேளாண் பல்லைக்கு சொட்டு நீர் வடிவமைப்பு சோதனை பதிப்புரிமை

 

கோவை, மே 31: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சொட்டு நீர் வடிவமைப்பு சோதனை மென்பொருள் உருவாக்கியதிற்கான பதிப்புரிமையை புது டெல்லி பதிப்புரிமை அலுவலக பதிப்புரிமை பாதிவாளரிடமிருந்து பெற்றது. சொட்டுநீர் வடிவமைப்பு சோதனை மென்பொருள், விவசாயிகள் மற்றும் பொறியாளர்களுக்கு திறமையான சொட்டு நீர் பாசன முறைகளை வடிவமைக்க வழிவகை செய்கிறது. இது தண்ணீரை சேமிப்பதற்கும், தண்ணீர் பற்றாக்குறை சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கும் இன்றியமையாதது.

சொட்டுநீர் கருவிகள் மூலம் நேரடியாக பயிரின் வேர் மண்டலத்திற்கு நீர் சொட்டுகளாக வெளியேற்றுவதன் மூலம், இந்த முறை நீர் மற்றும் ஆற்றல் இழப்பைக் குறைக்கிறது, அதே நேரத்தில் தொழிலாளர் செலவைக் குறைக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் செந்தில் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியின் முதன்மையர் ரவிராஜ் முன்னிலையில், சொட்டு நீர் வடிவமைப்பு சோதனை மென்பொருள் உருவாக்கியதற்கான பதிப்புரிமைச் சான்றிதழை அதனை உருவாக்கிய மாணவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

The post வேளாண் பல்லைக்கு சொட்டு நீர் வடிவமைப்பு சோதனை பதிப்புரிமை appeared first on Dinakaran.

Tags : Drip Design Experiment ,Coimbatore ,Tamil Nadu Agricultural University ,Design ,New Delhi Copyright Office ,Drip Design ,Drip Design Testing ,for Agriculture Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை...