×

பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் அறிமுகம்

 

கோவை, ஜூன் 1: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா தனது 666 நாட்கள் – நிலையான வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 666 நாட்களுக்கு சூப்பர் மூத்த குடிமக்களுக்கு ஆண்டிற்கு 7.95 சதவீதம் வழங்கும் இந்த தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை இதர வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த 666 நாட்கள் நிலையான வைப்புத் தொகை திட்டத்தை தொடங்குவதன் மூலம் நிலையான வைப்புகளில் அதிக வருமானத்தை பெறலாம். இந்த சிறந்த நிதி திட்டத்தை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலுபடுத்துகிறது.

இந்த திட்டத்தில் இன்று (ஜூன் 1ம் தேதி) முதல் மூத்த குடிமக்களுக்கு ஈண்டிற்கு 7.80 சதவீதம், மற்றவர்களுக்கு ஆண்டிற்கு 7.30 சதவீதம் நடைமுறைக்கு வரும். உள்நாட்டு, என்ஆர்ஓ மற்றும் என்ஆர்ஈ ரூபாய்களுக்கான காலை வைப்புகளுக்கு திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பொருந்தும். நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன் மற்றும் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி உள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு பேங்க் ஆப் இந்தியா கிளையையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது ‘போய் ஆம்னி னியோ ஆப்’ இண்டர்நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தி 666 நாட்கள் நிலையான வைப்புகளைச் செயல்படுத்தலாம்.

The post பணி ஓய்வு பிரிவு உபசார விழா பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Division ,Bank of India ,Coimbatore ,India ,Dinakaran ,
× RELATED சூப்பர்-8 சுற்றில் இன்று: இந்தியா – ஆப்கான் மோதல்