×

குழந்தைகளுக்கு போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

கோவை, மே 30: கோவைப்புதூர் பகுதியில் உள்ள சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட் பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருட்கள் மற்றும் புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கொண்டார். அப்போது அவர், போதை பொருட்களை ஒழித்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. போதை பழக்கம் அதனை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் அதிகம் நடத்தப்பட உள்ளது என கூறினார்.

நிகழ்ச்சியில், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் கவுரி உதயந்திரன், அனிமல் ஹெல்த் இந்தியா பிரைவேட் லிமிடெட் டாக்டர் ஹேமா மற்றும் டாக்டர் விஷ்ணு, போனிக்ஸ் மருத்துவமனை ஜீவானந்தம் மற்றும் குணசீலன், கோவைப்புதூர் குடியிருப்பு நல சங்கத்தினர், குழந்தைகள் என பலர் பங்கேற்றனர். இதில், குழந்தைகள் நாடகம், மவுன நாடகம் மற்றும் கலந்துரையாடல் மூலம் புகையிலை பயன்படுத்தினால் வரும் தீமைகள் மற்றும் புகையிலை பழக்கத்தில் இருந்து எப்படி வெளி வரவேண்டும்? என நடித்து காட்டினர்.

The post குழந்தைகளுக்கு போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags :
× RELATED எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்