புதுச்சேரி, ஜூலை 5: புதுவையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 நபர்களிடம் ரூ.6.82 லட்சம் மோசடி நடந்துள்ளது. புதுச்சேரியில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. சிலநிமிட கவனக்குறைவால் இழக்கும் பணத்தின் மதிப்பு லட்சத்தை தாண்டுவதால், ஏமாந்தபின் காவல் நிலையங்களை தேடி மக்கள் ஓடிவருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளை கண்டறிவதில் அதிக சிரமத்தை காவல்துறை எடுக்க வேண்டியிருப்பதால் இதில் சைபர் க்ரைம் போலீசார் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 நபர்கள் இணைய வழி மோசடியில் சிக்கி உள்ளனர். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் ரூ.3 லட்சத்துக்கு வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கான ஆவணங்களை சரிபார்க்க பணம் அனுப்புங்கள், உங்களுக்கு ரூ.2.30 லட்சத்துக்கு கூரியரில் பொருட்கள் வந்துள்ளது, இதற்கு முன்பணமாக ரூ.42 ஆயிரம் செலுத்த வேண்டும், உங்களுடைய பேன் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்பது போன்ற வழிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த 9 நபர்கள் ரூ.6.82 லட்சத்தை இழந்தனர். இணைய வழியில் அதிக லாப முதலீடுகள், வேலை வாய்ப்பு அல்லது வங்கிகளில், கூரியர்களில் இருந்து வரும் அழைப்புகளையும் உறுதி செய்யாமல் ஏற்க வேண்டாமென சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
The post அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் புதுவையைச் சேர்ந்த 9 நபர்களிடம் ஒரே நாளில் ₹6.82 லட்சம் மோசடி appeared first on Dinakaran.
