×

சின்னாளபட்டி அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

நிலக்கோட்டை, ஜூலை 2: சின்னாளபட்டியை அடுத்த போக்குவரத்து நகர் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (35). இவர் சின்னாளபட்டியில் இயங்கி வரும் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து டூவீலரில், சின்னாளபட்டியில் இருந்து போக்குவரத்து நகர் நோக்கி சென்றார். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post சின்னாளபட்டி அருகே பஸ் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Nilakottai ,Pandiyarajan ,Alamarathupatti ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது