×

முசிறியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம்

முசிறி: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி மாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முசிறி, தொட்டியம், துறையூர் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிமாறுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் பாத்திமா, சகாயராஜ், வனஜா சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ பிரிவு கிராமங்களில் ஒரு வருடமும், பி பிரிவில் மூன்று வருடமும், தொடர்ந்து பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட பணி மூப்பு அடிப்படையில் வட்டங்களுக்கிடையே பணி மாறுதலும் வழங்கப்பட்டது. அவர்கள் காலியாக உள்ள தங்களுக்கு விருப்பப்பட்ட கிராமங்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் முசிறி தொட்டியம் துறையூர் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவர்களுக்கு பணி மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

The post முசிறியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Musiri ,Musiri Kotakshiar ,Dinakaran ,
× RELATED முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்