×

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம்: பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: பொது சிவில் சட்டத்தை திடீரென ஒரு விவாதப் பொருளாக மாற்றியதின் பின்னணியில் பாஜகவின் தேர்தல் அஜெண்டா உள்ளது. இப்போது பொது சிவில் சட்டம் குறித்த எந்த ஒரு விவாதமும் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் பல அரிய கலாச்சாரங்களை அழித்து ஒரு நாடு ஒரே கலாச்சாரம் என்ற பெரும்பான்மை இனவாத கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் திட்டமாகவே இதை கருத முடியும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஆலோசனை நடத்திய பிறகே ஒரு முடிவை எடுக்க வேண்டும். திடீரென எடுக்கப்படும் ஒரு நிர்வாக முடிவால் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது. பொது சிவில் சட்டம் இந்த காலகட்டத்தில் தேவையானது அல்ல என்று 2018ல் சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.  அந்த நிலைப்பாட்டில் இருந்து திடீரென மாற வேண்டிய அவசியம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...