×

கோஹ்லியை தொட இன்னும் பாதி தூரம் கூட பாபர்அசாம் பயணிக்கவில்லை: ஹர்பஜன்சிங் கணிப்பு

மும்பை: விராட் கோஹ்லியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடிக்க இன்னும் பாதி தூரம் கூட பயணிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார். பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் ரன்களை குவித்து வருகிறார். 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த பாபர் அசாம், 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 30 சதங்களை விளாசியுள்ளார்.

அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் பாபர் அசாம், ஐசிசி தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் உள்ளார். இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், அவரை விராட் கோஹ்லியுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் அக்தருடன் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நடத்திய உரையாடலின் போது கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி தன்னை மாவீரராக அனைவருக்கும் நிரூபித்து காட்டிவிட்டார். ஆனால் பாபர் அசாம் அப்படியல்ல. நிச்சயம் ஒருநாள் விராட் கோஹ்லியின் இடத்தை பாபர் அசாம் பிடிக்கலாம்.

ஏனென்றால் பாபர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை சிறப்பாக ஆடினாலும், டி20 கிரிக்கெட் அவருக்கு இன்னும் கைகூடவில்லை. விராட் கோஹ்லியை பொறுத்தவரை, தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்ற இடத்தை அடைந்துவிட்டார். ஆனால் பாபர் அசாமிற்கு அப்படியல்ல. விராட் கோஹ்லி சென்ற பாதையில் பாபர் அசாம் இன்னும் பாதி தூரம் கூட பயணிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார். அதேபோல் பாபர் அசாமிற்கு மக்கள் கண்களை மூடிக்கொண்டு ஆதரவளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கோஹ்லியை தொட இன்னும் பாதி தூரம் கூட பாபர்அசாம் பயணிக்கவில்லை: ஹர்பஜன்சிங் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Babarazam ,Kohly ,Harbhajansing ,Mumbai ,Pakistan ,Babar Assam ,Virat Kohli ,BabarAssam ,Dinakaran ,
× RELATED இந்திய அணிக்கு தவான் கேப்டன்: ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு