×

காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி தரின் கூட்டாளி கைது

காஞ்சிபுரம், ஜூன் 28: காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி மறைந்த தரின் கூட்டாளி தினேஷை, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசாரால் சுற்றி வளைத்து காஞ்சிபுரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி தர் கடந்த 2017ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின், முக்கிய கூட்டாளிகளான தரின் கார் ஓட்டுநர் தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 40 வழக்குகளும், தரின் மற்றொரு கூட்டாளியான ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்த தாதா என்ற போட்டியில் 13 க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளனர்.

இதனை அடுத்து காஞ்சிபுரம் நகரத்தில் கொலைகளை தடுப்பதற்கான காவல்துறை சிறப்பு தனிப்படைகள் அமைத்து இருவரையும் கைது செய்தது. இதனால், கடந்த சில வருடங்களாக சிறையில் இருந்து வந்தனர். இதனை அடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி தினேஷ்குமார் திடீரென்று தலைமறைவானார். இந்நிலையில் சென்னையின் புறநகர் மாவட்டமாக விளங்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரவுடிகளை ஒழிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகள் ஆகியோரை கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர்.

அதில் குறிப்பாக தினேஷ்குமார், தியாகு ஆகிய 2 பேரை கைது செய்வதற்கு தனிப்படை போலீசார் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், பிற மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர் . இந்நிலையில் தரின் கார் ஒட்டுநராக இருந்த பிரபல ரவுடி தினேஷ் கடந்த வருடம் பிப்., மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு ஒன்றில் தினேஷ் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகமல் இருந்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தினேஷ்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினேஷை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில்.

காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு நேற்று முன்தினம் மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், கீழம்பி சந்திப்பு பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த தினேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தினேஷ்குமார் மனைவி ரேவதியின் வழக்கறிஞர் சார்பாக வெளியிட்டுள்ள தகவலால்ல பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, என் கணவர் நேற்று முன்தினம் மாலை ஏகாம்பரநாதர் கோயில் அருகில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு எந்த நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி தரின் கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinesh ,District Police ,SP ,Sudhakar ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...