×

கரூர் அருகே சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் கலெக்டர், போலீஸ் எஸ்பி திறந்துவைப்பு

தோகைமலை: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோயில்கள் திருவிழா கடந்த 6ம் தேததி அன்று தொடங்கியது. பின்னர் ஒரு தரப்பினரை கோயில் முன்மண்டபத்தின் உள்ளே அனுமதிப்பது சம்மந்தமாக கடந்த 7ம் தேதி அன்று இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டதால் மறுநாள் 8ம் தேதி அன்று சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை ஆர்டிஓ புஸ்பாதேவி, குளித்தலை டிஎஸ்பி தர், கடவூர் தாசில்தார் முனிராஜ் ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடுகள் ஏற்படவில்லை என்பதால் அன்று மாலையே போலீஸ் பாதுகாப்புடன் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயில்களில் உள்ள 4 வாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனை காளியம்மன் கோயில் வாயிலில் வைக்கப்பட்ட சீல்களை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் பாகுபாடுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல், பேரணி என்று மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தகவலறிந்த கலெக்டர் பிரபுசங்கர் இரு தரப்பையும் அழைத்து தனித்தனியே அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து அங்கு நடந்த பேச்சுவார்த்தைகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பாகுபாடுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த இருதரப்பு முக்கியஸ்தர்களும் அரசு எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் போலீஸ் எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலையில் தற்போதைய குளித்தலை ஆர்டிஓ சோபா, கடவூர் தாசில்தார் முனிராஜ் ஆகியோர் காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினர். பின்னர் பட்டியலின மக்கள் உள்பட அனைவரையும் கலெக்டர் பிரபுசங்கர் கோயில் முன்மண்டபத்திற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அனைவரும் வழிபாடுகள் செய்தபின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கரூர் அருகே சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் கலெக்டர், போலீஸ் எஸ்பி திறந்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Sealed Kaliyamman ,temple ,Karur ,Collector ,Police SP ,Vinayagar ,Kaliamman ,Bhagavatiyamman temples festival ,Veeranampatti ,Upper Panchayat Veeranampatti ,Karur district ,Kadavur ,Sealed Kalimman temple ,Collector, ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு