×

கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு

கரூர், மே 15: கருர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்தது இறந்த குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சுங்ககேட் அருகே கடந்த 4ம் தேதி அன்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இந்த பகுதியினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து இந்த பகுதி விஏஒ தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : KARUR ,Danthonymalai ,Karur Sungate ,Danthonymalai Sungate ,Karur Municipality ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன்...