×

குன்னம் அருகே டூவீலர் மோதி பெண் பலி

 

குன்னம், ஜூன் 22: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி செல்லம்மாள்(45). இவர் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்காக லப்பைக் குடிக்காடு செல்லும் ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது, ஒகளுர் பேருந்து நிறுத்தம் அருகே லப்பை குடிக்காட்டில் இருந்து அங்கனூர் நோக்கி சென்ற மணவழகன் (25) என்பவரது இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குன்னம் அருகே டூவீலர் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Gunnam ,Raj ,Mariyamman Kovil Street, Okalur Village, Gunnam District, Perambalur District.… ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...