×

ராமநாதபுரம் அருகே 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: தேவிபட்டினம் அருகே, ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடற்கரை காவல்நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல்படி, எஸ்.ஐ அய்யனார், தலைமைக் காவலர்கள் முருகானந்தம், சரவணபாண்டி ஆகியோர் இன்று அதிகாலை தேவிபட்டினம் அருகே, திருப்பாலைக்குடியில் உள்ள சஞ்சய்காந்தி (40) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் 300 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிந்து சஞ்சய்காந்தியை கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டைகளை ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனஉயிரின அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post ராமநாதபுரம் அருகே 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Devipatnam ,Coast Guard ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்...