×

பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் புதுகை மாவட்டம் மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும்

புதுக்கோட்டை: முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் புதுகை மாவட்டம் மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை கற்பகவிநாயகா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 7,616 பேர் பங்கேற்று விளையாடியதில் 1,470 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,000மும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000மும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000மும் என மொத்தம் ரூ.30,14,000 மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 630 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1,00,000மும், இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75,000மும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50,000மும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

விழாவில் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் கோப்பைக்கான 12 விளையாட்டுகளில் 5 பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இன்றையதினம் பரிசுகள் வழங்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றும் வகையில் பல்வேறு வகையான உலக அளவில் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நமது வீரர், வீராங்கனைகளிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்தி வருகிறனர். மேலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி வருகிறது. எனவே இன்றையகால இளைஞர்கள் அனைவரும் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி தமிழக அரசால் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் புதுகை மாவட்டம் மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Puducherry ,Pudukottai ,Minister ,Raghupathi ,Pudukhai ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...