×

சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதால் சென்னையில் நீர் தேங்காதவாறு வெளியேற்றப்படுகிறது. மழை பாதிப்பு தொடர்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கும் அளவிற்கு தற்போது தேவைகள் இல்லை என்றும அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் நள்ளிரவு முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு 04445674567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாநகர பேருந்துகள் செல்லக்கூடிய சுரங்கபாதைகளில் மழைநீர் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Ma. Subramanian ,Department of Medicine and People's Well-Being ,Minister ,Ma. Subramanian ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...