பெரம்பலூர்,ஜூன்17: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்ப டையில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயி ற்சி அளிக்கப்பட்டது. மோப்ப நாய்ப்பிரிவும் பங்கேற்றது. பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் அருகே மாவட்ட கா வல்துறையின் கட்டுப்பாட்டில் ஆயுதப்படை வளாகம் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசாருக்கு நேற்று (16ம்தேதி) வாராந்திர கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில் கலந்து கொண்ட ஆயுதப்படை போலீசாருக்கு உடற்பயிற்சி, லத்தி பயிற்சி, ஆயுதப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்ப ட்டது. இக்கவாத்து பயிற்சி யில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சப்.இன்ஸ்பெக் டர்கள், ஆயுதப்படை போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது ஆ யுதப்படையின்கீழ் காவல் துறையில் இயங்கிவரும் மோப்பநாய் பிரிவுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
The post பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி appeared first on Dinakaran.
