×

நிலப்பிரச்னை தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேருக்கு அரிவாள் வெட்டு

மணப்பாறை, ஜூன்13: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே நில அளவையில் இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 9 பேருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி கோசிப்பட்டியை சேர்ந்த அடைக்கண் மகன் பிச்சன் (60) மற்றும் பழனி மகன் ராமன்(60) ஆகிய இரு தரப்பினர்களிடையே விளைநில பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில் வருவாய்த்துறை நில அளவையர் மூலம் ராமன் தரப்பில் நேற்று நில அளவீடு நடைபெற்றுள்ளது. அப்போது பிச்சனுக்கு சொந்தமான இடம் ராமன் வைத்திருந்த இடத்தின் உள்ளே வரை அளவீடு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராமன் தரப்பினர், பிச்சன் தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு அரிவாளால் தாக்கிக் கொண்டனர். இதில் பிச்சன் தரப்பைச் சேர்ந்த பிச்சன்(60), அவரது மகன் முத்துராஜா(30), சகோதரர் ராசு(62), அவரது மனைவி சின்னம்மாள்(55), ராசு மகன் வேலு (38), அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் அன்பழகன்(33) ஆகியோருக்கும், ராமன் தரப்பில் குமார் மனைவி சகுந்தலா(35), ஆண்டிச்சாமி மனைவி ஜெயலெட்சுமி(37) என 9 பேருக்கு தலையில் அரிவாள் வெட்டும், மற்ற 6 நபர்களுக்கு காயமும் ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி, மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post நிலப்பிரச்னை தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Putthanantham ,Trichy ,
× RELATED டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது