×

லஞ்சம் பெற்ற விவகாரம் பண்ருட்டி நகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை

கடலூர், ஜூன் 13: கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002ம் ஆண்டு மனோகரன் என்பவர் பணியாற்றினார். அப்போது பண்ருட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடித்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ற போது, கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், மனோகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 1 ½ ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து மனோகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post லஞ்சம் பெற்ற விவகாரம் பண்ருட்டி நகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Panruti Municipality ,Cuddalore ,Manokaran ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு