×

பூரி ஜெகநாதர் கோயில் பகுதியில் டிரோன் பறக்க தடை

புவனேஷ்வர்: ஒடிசாவின் பூரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகநாதர் கோயிலில் 20ம் தேதி ஆண்டு ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதனையொட்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு டிரோன் பறப்பதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1ம் தேதி வரை டிரோன்களை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தடையை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post பூரி ஜெகநாதர் கோயில் பகுதியில் டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Puri Jagannath ,Bhubaneswar ,Ratha Yatra ,Jagannath ,Puri, Odisha.… ,
× RELATED ‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’: பாஜ...