×

தல விருட்ச வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும். அப்படி ஒருசில கோயில்களில் இருக்கக்கூடிய தல விருட்சங்கள் பற்றியும், அதனை நீங்கள் வழிபடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

தல விருட்சங்கள் மற்றும் நன்மைகள்

முச்சங்கம் நடந்த மதுரை மாநகரில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் இருக்கக்கூடிய தல விருட்சம் என்ன என்று தெரியுமா?

அதுதான் “கடம்ப மரம்’’. இந்த கடம்ப மரத்தை நீங்கள் வழிபடுவதன் மூலம் உங்களுக்கு கல்வி அபிவிருத்தி ஏற்படும்.

பலவிதமான மூலிகைத் தண்ணீரை கொட்டுகின்ற அருவிகளின் மத்தியில் குடிகொண்டு, நம்மைக் காத்தருளும் குற்றாலநாதர் கோயில் சந்நதியில், தல விருட்சம் என்ன என்று தெரியுமா?

“பலா மரம்’’ குற்றால நாதரின் தலவிருட்சமாக அமைந்துள்ளது. இந்த தல விருட்சத்தை நீங்கள் வணங்குவதின் மூலம் உங்களுக்கு இனிய வாழ்வு ஏற்படும்.

மயிலாடுதுறையில் அமர்ந்து நம்மை காத்தருளும் மயூரநாதர் கோயிலில் இருக்கும் தல விருட்சத்தை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை தருகின்ற “மாமரம்’’ தான் இந்த தலத்தின் தல விருட்சமாக உள்ளது. இந்த தல விருட்சத்தை நீங்கள் வணங்குவதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் வந்து குவியும்.

அல்வாவுக்கு பெயர் பெற்ற திருநெல் வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோயிலின் தல விருட்சம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இங்கு உள்ள நெல்லையப்பரின் தல விருட்சம் “மூங்கில்’’ ஆகும். இந்த மூங்கில் மரத்தை நீங்கள் வணங்குவதன் மூலம் உங்களுக்கு இசை மற்றும் ஞானம் அதிகளவு கிட்டும்.

தென்னகத்தில் வாழும் மக்களின், காசி என்று அழைக்கப்படக்கூடிய தென்காசியில் எழுந்தருளி இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலின் தலவிருட்சம் எது தெரியுமா?

இந்த கோயிலின் தல விருட்சம் ``செண்பக மரம்’’ ஆகும். இந்த செண்பகமரத்தை நீங்கள் வழிபட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்கு திருமண யோகம் விரைவில் ஏற்படும். திருமண வரத்தை தரக்கூடிய ஆற்றல் இந்த தல மரத்திற்கு உள்ளது.

உத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் எது என்று தெரியுமா?

இங்கு தல விருட்சமாக இருப்பது, “இலந்தை மரம்’’ ஆகும். இந்த இலந்தை மரத்தை நீங்கள் வணங்குவதின் மூலம் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதோடு, தீர்க்க சுமங்கலி யோகமும் கிட்டும்.

தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்

The post தல விருட்ச வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thala Virutsa ,Dala ,
× RELATED வெளிநாட்டில் இருந்து பெங்களூரு...