×

அரசுப்பள்ளிகள், கல்லூரிகளின் வளாகத்தில் ஆழ்துளை கிணறுகள்

சேலம், மே 17: தமி–ழ–கத்–தில் நிலத்–தடி நீர்–மட்–டம் குறித்த கண்–கா–ணிப்பை தீவி–ரப்–ப–டுத்–தும் வகை–யில், 307 பிர்க்–காக்–க–ளில் உள்ள அர–சுப்–பள்–ளி–கள் மற்–றும் கல்–லூ–ரி–க–ளின் வளா–கங்–க–ளில் ஆழ்–துளை கிணறு அமைக்க நட–வ–டிக்கை எடுக்–கப்–பட்டு வரு–கி–றது. தமி–ழ–கத்–தில் பொதுப்–ப–ணித்–துறை மற்–றும் நீர்–வள ஆதா–ரத்–துறை மூலம் அணை–கள், ஆறு–கள், ஏரி–கள், குளம் உள்–ளிட்ட நீர்–நி–லை–கள் கண்–கா–ணித்து பரா–ம–ரிக்–கப்–பட்டு வரு–கி–றது. தற்–போது எதிர்–வ–ரும் மழைக்–கா–லத்தை கருத்–தில் கொண்டு, நீர்–வ–ரும் பாதை–கள் சீர–மைக்–கும் பணி–கள் நடந்து வரு–கின்–றன. இத–னி–டையே, மழைக்–கா–லங்–க–ளில் பெய்–யும் மழை–ய–ளவு குறித்து கண்–கா–ணித்து அறிக்கை அளிக்–கப்–ப–டும். மேலும், ஒவ்–வொரு மாத–மும் நிலத்–தடி நீர்–மட்–டத்தை கண்–கா–ணித்து, அதற்–கேற்–ற–வாறு நட–வ–டிக்ை–க–கள் மேற்–கொள்–ளப்–ப–டும்.

இதற்–காக அனைத்து மாவட்–டங்–க–ளி–லும் உள்ள வரு–வாய் வட்ட அள–வில் ஆழ்–துளை கிண–று–கள் அமைக்–கப்–பட்–டுள்–ளன. இந்–நி–லை–யில் தேசிய நீரி–யல் திட்–டத்–தின் கீழ் நிலத்–தடி நீர்–மட்–டத்தை கண்–கா–ணிக்க கூடு–த–லாக ஆழ்–துளை கிண–று–கள் அமைக்க நட–வ–டிக்கை எடுக்–கப்–பட்–டுள்–ளது. இத–னை–ய–டுத்து தமி–ழ–கத்–தில் உள்ள அரசு பள்–ளி–கள் மற்–றும் கல்–லூ–ரி–க–ளில் இந்த ஆழ்–துளை கிண–று–களை அமைப்–பது குறித்து கணக்–கெ–டுப்பு நடத்–தப்–பட்டு வரு–கி–றது.

இது–கு–றித்து அதி–கா–ரி–கள் கூறி–ய–தா–வது: தேசிய நீரி–யல் திட்–டத்–தின் கீழ் நாடு முழு–வ–தும் உள்ள நீர்–வ–ளங்–களை பெருக்–கும் வகை–யில், நீர் இருப்பு, நிலத்–தடி நீர் மட்–டம் மற்–றும் அது சார்ந்த துல்–லிய தக–வல்–கள் பெறப்–பட்டு வரு–கின்–றன. அதன்–படி, தமி–ழ–கத்–தில் நீர்–வ–ளத்–துறை சார்–பில் ஆழ்–துளை கிண–று–கள் அமைக்–கப்–பட்டு, மாதந்–தோ–றும் நிலத்–தடி நீர்–மட்–டம் கண்–கா–ணிக்–கப்–ப–டு–கி–றது. இத–னி–டையே, இந்த நிலத்–தடி நீர்–மட்–டம் அள–வீட்டை, மேலும் துல்–லி–யப்–ப–டுத்–தும் வகை–யில், கூடு–த–லாக ஆழ்–துளை கிண–று–கள் அமைக்–கப்–ப–ட–வுள்–ளன.

தமி–ழ–கத்–தில் மொத்–த–முள்ள 1,209 வரு–வாய் வட்–டங்–க–ளில், 307 பிர்க்–காக்–க–ளில் கூடு–த–லாக ஆழ்–துளை கிணறு அமைத்து கண்–கா–ணிக்–கப்–ப–ட–வுள்–ளது. பாது–காப்பு கார–ணங்–களுக்–காக தொடக்க, நடு–நிலை, உயர்–நிலை மற்–றும் மேல்–நி–லைப்–பள்–ளி–க–ளில் வளா–கங்–க–ளில் இந்த ஆழ்–துளை கிண–று–கள் அமைக்க நீர்–வ–ளத்–துறை முடிவு செய்–துள்–ளது. இந்த கிண–று–கள் நிலத்–தடி நீர்–மட்–டத்தை கண்–கா–ணிப்–ப–தற்–காக மட்–டுமே ஏற்–ப–டுத்–தப்–ப–டு–கி–றது. பிற கார–ணங்–களுக்–காக இவற்றை பயன்–ப–டுத்த முடி–யாது. மாண–வர்–க–ளின் பாது–காப்–பிற்–காக, ஆழ்–துளை கிணறு அமை–யும் பகுதி முழு–வ–தும் பெட்–டி–கள் அல்–லது வேலி–கள் அமைத்து பரா–ம–ரிக்–கப்–ப–டும். இதற்–காக மாநி–லம் முழு–வ–தும் விவ–ரங்–கள் சேக–ரிக்–கப்–பட்டு வரு–கி–றது.

இது–தொ–டர்–பாக, நீர்–வ–ளத்–துறை தலைமை பொறி–யா–ளர் பிர–பா–க–ரன், தொடக்–கக்–கல்வி இயக்–க–கம், பள்–ளிக்–கல்வி இயக்–கு–ந–ர–கம் மற்–றும் கல்–லூரி கல்வி இயக்–கு–ந–ருக்கு கடி–தம் அனுப்–பி–யுள்–ளார். அதில், சம்–பந்–தப்–பட்ட கல்வி நிலை–யங்–க–ளில் ஆழ்–துளை கிணறு அமைக்க அனு–மதி கடி–தங்–களை வழங்க அறி–வு–றுத்–து–மாறு, மாவட்ட முதன்மை கல்வி அலு–வ–லர்–கள் மற்–றும் கல்–லூரி கல்வி துணை இயக்–கு–நர்–களை கேட்–டுக்–கொண்–டுள்–ளார். அதன்–படி, முதற்–கட்–ட–மாக மாந–க–ராட்சி, நக–ராட்சி மற்–றும் ஊராட்சி ஒன்–றிய துவக்க, நடு–நி–லைப்–பள்–ளி–க–ளில், இந்த ஆழ்–துளை கிணறு அமைக்க தேவை–யுள்ள பள்–ளி–க–ளின் விவ–ரங்–களை அனுப்ப அனைத்து மாவட்ட தொடக்–கக்–கல்வி அலு–வ–லர்–களுக்–கும் உத்–த–வி–டப்–பட்–டுள்–ளது. வரு–வாய் மாவட்–டம், ஒன்–றி–யம் வாரி–யாக, பள்–ளி–க–ளின் விவ–ரங்–களை தொகுத்து அனுப்ப தொடக்–கக்–கல்வி இயக்–கு–நர் அறி–வொளி, கல்–வித்–துறை அதி–கா–ரி–களுக்கு அறி–வு–றுத்–தி–யுள்–ளார். இவ்–வாறு அதி–கா–ரி–கள் தெரி–வித்–த–னர்.

The post அரசுப்பள்ளிகள், கல்லூரிகளின் வளாகத்தில் ஆழ்துளை கிணறுகள் appeared first on Dinakaran.

Tags : Bore wells ,Salem ,Tami-Zha-Kath ,307 Birk-Kaks ,Thivi-Rab-P-Duttum ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...