×

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ₹6.97 கோடியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம்: முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், மே 16: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ₹6.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதியினை தமிர்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி கட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகம் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ₹3.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று மாணவியர் விடுதியினை திறந்து வைத்தார்.

இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி மாணவியர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், ரெட்டமங்கலம், பெரும்பத்தூர் ஆகிய பகுதிகளில் ₹6.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட கே.ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெங்கடேசன், நிர்வாகிகள் மண்டல தலைவர் செவிலி மேடுமோகன், விசுவநாதன், கமலக்கண்ணன், அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சியில் ₹6.97 கோடியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம்: முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Corporation ,Chief Minister ,Kanchipuram ,Adi Dravidar Welfare Department ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...