×

கலெக்டர் தலைமையில் நடந்தது தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.12.40 கோடியில் புதிய கட்டிட பணி துவக்கம்

 

தோகைமலை: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 2022-2023ம் ஆண்டிற்கான உயர்க்கல்வி துறை மானிய கோரிக்கையின் போது ரூ.12.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதல்வரின் உத்தரவையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆலோசனைப்படி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமை அடிக்கல் நாட்டினார். குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி, கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஜாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஹேமா நளினி, மாவட்ட கவுன்சிலர் நந்தினி, மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், கடவூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன், மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தமிழ்பொன்னுச்சாமி, கடவூர் முன்னால் துணைத்தலைவர் ஆண்டிச்சாமி, மாவட்ட பிரதிநிதி அய்யாத்துரை, வீரியப்பட்டி மருதை, டிசா கமிட்டி உறுப்பினர் ரவி (எ) வடிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், ப.உடையாபட்டி பேக்கரி வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் வௌ்ளப்பட்டி முருகேசன், வாழ்வார்மங்களம் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி பிரபாகரன், கிருஷ்ணகுமாரி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி அண்ணாராபின்சன், ஒன்றிய துணை செயலாளர் சண்முகப்பிரியா திருவேங்கடம், குமரேசன், முன்னால் தலைவர் மரியலூயிஸ், விவசாயணி ராமசாமி, விவசாய தொழிலாளரணி முருகானந்தம், வர்த்தகணி விஜயகுமார், இலக்கியணி கருப்பசாமி, சுற்றுச்சூழல் அணி பாண்டியன், மாணவரணி சந்துரு, தொண்டரணி தயாளன், மகளிரணி தனபாக்கியம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், வல்லரசு, கார்த்திக், மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், தொண்டரணி துணை அமைப்பாளர்கள் செந்தமிழ் செல்வன், மகாமுனி உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு அரிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் தலைமையில் நடந்தது தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.12.40 கோடியில் புதிய கட்டிட பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Dharagambatti Government Arts College ,Thokaimalai ,Tamil Nadu Government Arts and Science ,Dharagambatti ,Kadavur ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு