×

பெரம்பலூர் நகராட்சியில் மாஸ் கிளீனிங் பணி

 

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வாராவாரம் மாஸ் கிளீனிங் எனப்படும் தூய் மைப் பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு பகுதியிலுள்ள பிரதான மழைநீர் வடிகால் வாய்க்கால், 5வதுவார்டுபகுதியில் ரோவர் மேல்நிலைப்பள்ளி சாலையிலுள்ள பிரதான மழைநீர் வடிகால் வாய்க்கால்,மேலும் நகராட்சியின் 21வது வார்டு துறை மங்க லத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக டெப்போ முன்புள்ள பிரதா ன மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் ஆகியன தூர் வாரி சரி செய்யப்பட்டன.

நகராட்சி நிர்வாகத்தின் சா ர்பாக நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நக ராட்சி ஆணையர்(பொ) ரா தா ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்ற இந்தப் பணிகளை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், 19வது வார்டு கவுன்சிலர் சித்ரா சிவக்குமார், திமுக நகர மாணவரணி அமைப்பாளர் ரினோ பாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். இந்தப் பணிகளை துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலு, கோபிநாத் ஆகியோரது மேற்பார்வையில் 100 துப்புரவு ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

The post பெரம்பலூர் நகராட்சியில் மாஸ் கிளீனிங் பணி appeared first on Dinakaran.

Tags : Perambalur Municipality ,Perambalur ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...