கிருஷ்ணகிரி, மே 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்றதாக கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய் அரவிந்த்(23), வேப்பனஹள்ளி தடத்தாரை ராகுல்(22), காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெரு மணிபாரதி(23), ஓசூர் தோட்டக்கிரி பகுதியில் கஞ்சா விற்றதாக கேரள மாநிலம் புலிகரா திருச்சூர் பவன் அப்ஜித்(24), பாகலூர் காமராஜ் நகர் முருகேஷ், வேப்பனஹள்ளி பகுதியில் கஞ்சா விற்ற ஆந்திரா மாநிலம் மல்லானூர் அர்ச்சனா, பெரியஜெட்டுபள்ளம் நந்தகுமார்(28), கெலமங்கலம் நரநட்டி ராஜப்பா (47), கோரட்டகிரி சிவக்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹18,700 மதிப்பிலான 1710 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
The post கஞ்சா விற்ற 9 பேர் கைது appeared first on Dinakaran.
