பண்ருட்டி, மே 12: பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் பர்தா அணிந்து இரு பெண்கள் வந்து நகை வாங்குவது போல் நடித்து பல்வேறு டிசைன்களை கேட்டனர். ஆனால் டிசைன் பிடிக்கவில்லை என கூறி வெளியே புறப்பட முயன்றனர்.இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை பரிசோதித்த போது, நகை திருடியது தெரிந்தது. இதையடுத்து கடை மேலாளர் பாலாஜி, பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கவிதா(50), ஷீலா தேவி(37) என்றும், இருவரும் சகோதரிகள் என்றும் தெரியவந்தது. கடையில் நகை திருடியதை 2 பேரும் ஒப்பு கொண்டனர். இதை தொடர்ந்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிராம் தங்க தோடை பறிமுதல் செய்தனர்.
The post வாங்குவது போல் நடித்து நகை திருடிய சகோதரிகள் கைது appeared first on Dinakaran.
