×

ஜெயம்கொண்டம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு பலி

ஜெயங்கொண்டம். மே, 11: ஜெயங்கொண்டம் அருகே பெய்த பலத்த மழையினால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று பலியானது. பலியான பசு மாட்டிற்கு இழப்பீடு கேட்டு மாட்டின் உரிமையாளர் ஆர்டிஓ விடம் மனு கொடுத்தார்.
அரியலூர் மாவட்டம் கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி (60) இவர் தனது பசு மாட்டை மேய்ப்பதற்காக மாடு மற்றும் கன்றை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்க முன் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக விவசாய மின் இணைப்பிற்கு செல்லக்கூடிய மின் கம்பி அருந்து கீழே கிடந்துள்ளது.

அப்போது அவ்வழியாக சென்ற பசுமாடு அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. பசு மாட்டினை ஓட்டிச் சென்ற உரிமையாளர் சுதாரித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக கன்று குட்டியுடன் உயிர் தப்பினார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.மேலும் கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பசுமாட்டிற்க்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மின்கம்பி அறுந்து விழுந்ததனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உடையார்பாளையம் ஆர்டிஓ விடம் மாட்டு உரிமையாளர் கலைமணி புகார் மனு அளித்துள்ளார். சீமை பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன பசு மாட்டின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

The post ஜெயம்கொண்டம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு பலி appeared first on Dinakaran.

Tags : Jayamkondam ,Jayangondam ,Dinakaran ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...