×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிலக்கோட்டை கேசிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி: தொடர்ந்து 14வது ஆண்டாக சாதனை

 

நிலக்கோட்டை, மே 10: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள தேவாங்கர் அரசு உதவி பெறும் பள்ளியில் 96% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி என்ற மாணவி 569 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், காயத்ரி என்ற மாணவி 558 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், லாவண்யா என்ற மாணவி 549 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் செயலர் ராகவன், தலைவர் பெத்தண்ணசாமி. தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்தினார்.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹரிணி என்ற மாணவி 514 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடத்தையும், கிஷோர் என்ற மாணவர் 456 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.இதே போல திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள கேசிஎம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 14வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 590 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளி மாணவி தேசிகா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

580 மதிப்பெண்கள் எடுத்து மாணவி மதுமிதா 2ம் இடத்தையும், 579 மதிப்பெண்கள் எடுத்து மாணவர் ஸ்ரீனிவாஸ் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சுந்தரம் மற்றும் முதல்வர் தனலட்சுமி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். வேதியியலில் 3 பேர், கணினி அறிவியலில் ஒரு மாணவர், அடிப்படை கணினிவியலில் 6 பேர், பொருளியலில் 3 பேர், வணிகவியலில் 3 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மற்றும் இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 37 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 82 பேர் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிலக்கோட்டை கேசிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி: தொடர்ந்து 14வது ஆண்டாக சாதனை appeared first on Dinakaran.

Tags : Nilakottai KCM Matric Higher Secondary School ,Nilakottai ,Devankar Government Aided School ,Dindigul District Chinnalapatti… ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்