×

13ம் தேதி திராவிடர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம்

 

ஈரோடு, மே 10: திராவிடர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம் வருகின்ற 13ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் வருகின்ற 13ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்குகிறார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 1000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டமும், ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது. அதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் முத்துசாமி, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

The post 13ம் தேதி திராவிடர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : 13th Dravidar Kazhagam State General Committee ,Erode ,Dravidar ,Kazhagam State General ,Committee ,Kazhagam State ,General ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது