×

திருக்கழுக்குன்றத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி கிராமத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏவும், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி தலைமை தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதியும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான சேகர் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக பேச்சாளர் தடா சுந்தரம் இரண்டாண்டுகள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் பற்றி பேசினார். இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ், ஒன்றிய அவை தலைவர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார், ஒன்றிய துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயபால், சரஸ்வதி பாபு, இளைஞரணி நிர்வாகிகள் பரந்தாமன், எம்.கே.தினேஷ், பன்னீர், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Thirukkalukkunram ,Thirukkalukkunram North Union DMK ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...