×

சர்க்கரை நோய் முகாம்

 

ஒட்டன்சத்திரம், மே 8: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள லெக்கையன் கோட்டையில் உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ராஜகுரு தலைமை வகித்தார். முனைவர் ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவர் ஆசை தம்பி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய் சம்பந்தமான பரிசோதனை செய்து உடற்பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹெரால்டு ஜாக்சன், புரவலர்கள் ஷேக் அப்துல் காதர், ஆறுமுகம், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

The post சர்க்கரை நோய் முகாம் appeared first on Dinakaran.

Tags : Othanchatram ,World Red Cross Day ,Lekhaian Fort ,Diabetes ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி