×

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் காய்கறிகளின் தேவை குறைந்தது. கேரள வியாபாரிகளின் வருகை குறைந்ததன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைத்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.135-க்கு விற்ற உருண்டை பச்சை மிளகாய் 105-க்கும், ரூ.33-க்கு விற்ற வெண்டை ரூ.18-க்கும், ரூ.16-க்கு விற்ற சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் மழை குறைந்தால் காய்கறி தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

The post ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Othanchatram ,Kerala ,Dinakaran ,
× RELATED மாநில பெண்கள் கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்