×

வீரட்டானேஸ்வரர் கோயில் பலிபீடம் உடைப்பு

பண்ருட்டி, மே 7: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் வீரட்டனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. கோயிலில் அப்பர் சதய உற்சவ திருவிழா தற்போது நடந்து வருகிறது. கோயிலில் பலிபீடம் இருக்கும் கல்வெர்ட், தூண்களை நேற்று மர்ம நபர்கள் இடித்து தள்ளி உள்ளனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் கோயிலில் மற்ற பூஜைகள் நிறுத்தம் செய்துவிட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் பழைய கோயில் என்பதால் பலிபீடத்தை இடித்து தள்ளியதால் மர்ம நபர்கள் யார் என்று பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் பல லட்சம் மதிப்பு உள்ள சிலைகளை கடத்த சதி திட்டமா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். பைக்கில் வந்த ஆசாமிகள் பலிபீடத்தை உடைத்ததாக தெரிகிறது. இருப்பினும் வீடியோ பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவதிகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீரட்டானேஸ்வரர் கோயில் பலிபீடம் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Veerataneswarar ,Panrutti ,Veerataneswarar Temple ,Thiruvathikai ,Hindu Religious Charities Department ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு