×

மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி, மே 4: கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் காளிமுத்து, மா விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (5ம் தேதி) 12.30 மணியளவில், மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான 2023ம் ஆண்டிற்கான முத்தரப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில், முன்னோடி மா விவசாயிகளும், மாங்கூழ் உற்பத்தி நிறுவன பிரநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Deputy Director ,Agriculture ,Marketing ,and Commerce ,Kalimuthu ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை