×

சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயிலில் வழிபாடு

சங்கராபுரம், மே 3: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி காலையில் அம்மனுக்கு கூழ்வார்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு வழிபாடு செய்து கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் பூசாரியின் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொண்டனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவாணை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டம் பாட்டமுடன் வழிபட்டனர்.

பொழுது விடிந்ததும் அரவாணின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் கூத்தாண்டவர், மாரியம்மன், வீரபத்ர செளடேஸ்வரி ஆகிய மூன்று சாமிகளும் மேளதாளம் முழங்க வீதியுலா நடைபெற்றது.

The post சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தாண்டவர் கோயிலில் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Kutthandavar Temple ,Glathur village ,Kallakkurichi District ,Koothandavar temple festival ,Gluttur village ,
× RELATED கஞ்சா வைத்திருந்தவர் கைது