×

கஞ்சா வைத்திருந்தவர் கைது

சங்கராபுரம், ஜூன் 8: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை வேங்கோடு கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் முத்து (39). இவர் சங்கராபுரம் அருகே உள்ள கள்ளிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்வதாக சங்கராபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் கிராமத்தில் சென்று சோதனை நடத்தி அங்கு மறைமுகமாக நின்று கொண்டிருந்த முத்துவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Andi Makan Muthu ,Kalvarayanmalai Venkodu ,Shankarapuram, Kallakurichi district ,Sankarapuram police ,Kallipattu ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED துணியை காய வைத்த போது மின்சாரம் தாக்கி...