×

டெல்லியில் நடந்த அறிவியல் ஆய்வு கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக க்யூஆர் கோடுக்கு பாராட்டு

 

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் அறிவியல் தொழில்நுட்ப உபகரண மையத்தில் குறியீடு வசதி டெல்லியில் நடந்த அறிவியல் ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு பெற்றது. கடந்த 24ம் தேதி அகில இந்திய அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) ஏற்பாடு செய்திருந்த விஸ்வவித்யாலயா அனுசந்தன் உத்சவ் – 2023, முன்னதாக நடைபெற்ற டிஎஸ்டி-பர்ஸ் (பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிறப்பை மேம்படுத்துதல்) ஆய்வுக் கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பங்கேற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங் விழாவை தொடங்கி வைத்தார்.

பல்வேறு பர்ஸ் விருது பெற்ற பல்கலைக்கழகங்கள் பங்கேற்று, பர்ஸ் திட்டத்தின் மூலம் கருவிகள் வசதிகளுடன் கூடிய கண்காட்சி ஸ்டால்கள் மற்றும் வெளியீடுகளுடன் அவற்றின் பயன்பாடு ஆகியவை சிறப்பிக்கப்பட்டன. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் QR code (உடனடி பதிலளிப்பு) குறியீட்டீன் அணுகு முறையை DST-PURSE திட்டத் தலைவர் பிரதிஸ்தா பாண்டே பாராட்டினார். இதன்மூலம் வேலை செய்யும் வசதி மற்றும் மாணவர்களின் பயன்பாட்டின் எண்ணிக்கையை டெல்லியில் இருந்து மீட்டெடுத்தார்.

எனவே இந்த நடைமுறையை மற்ற பல்கலைக்கழகங்களைப் பின்பற்றுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் அனைத்து விவரங்களையும் உலகில் எங்கு இருந்தாலும் கொண்டு வர முடியும், மேலும் 100% பயன்பாட்டை அடைய முடியும் என்று கூறினார். பாரதிதாசன் பல்கலைக்கழக பர்ஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்தர் ஜேம்ஸ், பேராசிரியர் திருமுருகன், அறிவியல் தொழில்நுட்ப உபகரண மைய ஒருங்கிணைப்பாள்ர ஆகியோர் பங்கேற்றனர்.

The post டெல்லியில் நடந்த அறிவியல் ஆய்வு கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக க்யூஆர் கோடுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Bharathidasan University ,Delhi Trichy ,Equipment Center ,Delhi ,Dinakaran ,
× RELATED பி.எச்.டி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு...