×

திருப்பரங்குன்றத்தில் கோடைமழை: ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.! போக்குவரத்து பாதிப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்றிரவு பெய்த கோடைமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள், செல்போன் டவர்கள் உள்ளிட்டவைகள் சாய்ந்து விழுந்தன. நேற்றிரவு பெய்த கோடைமழையால் திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்று காலை மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு பயணிகளுடன் சென்ற அரசு இடுப்பளவு தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றது. டிரைவர் ராஜாங்கம் நீண்டநேரம் போராடியும் பஸ்சை எடுக்க முடியவில்லை. இதனால் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளுடன் பஸ்சில் இருந்து தண்ணீரில் நடந்து சென்றனர். பின் அரசு பஸ் மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திருப்பரங்குன்றத்தில் கோடைமழை: ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.! போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupparankuram ,Tirupparankuntam ,Madurai Tirapparankunam ,Tirupparankurunam ,Dinakaran ,
× RELATED மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய...