×

காவிரி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு வர வேண்டும்: சட்டசபையில் காடுவெட்டி தியாகராஜன் பேச்சு

முசிறி, ஏப்.21: முசிறி தொகுதியில் உள்ள ஏரி குளங்களுக்கு காவிரி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை கொண்டு வந்து விவசாயம் செழிக்க உதவி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வரிடம் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கோரிக்கை வைத்தார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் ஒருபுறம் காவிரி தண்ணீர் மூலம் விவசாயம் நடைபெறும் பகுதி இருந்தாலும் பெரும்பாலான பகுதிகள் கிணற்று தண்ணீர் போர்வெல் மற்றும் மழை நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். வானம் பார்த்த பூமியாக மழையை நம்பி சோளம், கம்பு, கடலை உள்ளிட்ட சிறுதானிய சாகுபடி செய்யும் நிலையிலேயே விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சட்டசபையில் நேற்று பொது கோரிக்கை குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, முசிறி தொகுதி நஞ்சை மற்றும் புஞ்சை சாகுபடி செய்யும் பகுதியாக உள்ளது. விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றில் இருந்து மழை வெள்ள காலங்களில் வீணாகும் தண்ணீரை ஏரி குளங்களுக்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் விவசாயம் செழிக்கும். முசிறி தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என்றென்றும் திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் நிலைப்பாடு ஏற்படும்.

மேலும் நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் திருத்திய மலை ஏரிக்கு சோதனை முயற்சியாக கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் மூலம் அப்பகுதி விவசாயம் பெரிதும் செழித்துள்ளது. எனவே முசிறி தொகுதி சேர்ந்த அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஏரி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு திட்டத்தை நீர் பாசன துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

The post காவிரி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு வர வேண்டும்: சட்டசபையில் காடுவெட்டி தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Kaduvetti Thiagarajan ,Musiri ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை