×

ஆவடி அருகே பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

ஆவடி: ஆவடி அருகே கோவில்பதாகை, சுவாமி நகரைச் சேர்ந்தவர் உமா (40). இவர், கடந்த 3 மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இங்கு, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் பணி காரணமாக இரு சக்கர வாகனத்தில் உமா செங்குன்றத்துக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு வேலையை முடித்துவிட்டு அன்று மாலை 400 அடி சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் உமா வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, இவர் அந்தோணியார் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில், பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அங்கு யாரும் இல்லாததை கண்டு நோட்டமிட்டு திடீரென வழிமறித்துள்ளார்.

பின்னர், உமாவை கத்திமுனையில் மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயற்சித்துள்ளார். எனினும், உமா செயினை இறுகப் பிடித்தபடி அலறி சத்தம் போட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மர்ம நபர், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு, இரண்டரை சவரன் மதிப்பிலான பாதி சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பித்து அங்கிருந்து சென்றுவிட்டான். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஆவடி அருகே பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Uma ,Kovilpathagai, Swami Nagar ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...