×

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

விராலிமலை,ஏப்.19: அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் ராசாத்தி(38) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்த ராசாத்தியின் மகன் வெற்றிவேல் பேச்சைக் கேட்காமல் முத்துக்குமாருடன் ராசாத்தி திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்து உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெற்றிவேல் கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆத்திரத்தில் இருந்த ராசாத்தியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 16ம் தேதி மேட்டு தெருவில் உள்ள முத்துக்குமார் வீட்டிற்கு சென்று, அவரை சரமாரி வெட்டி கொன்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னவாசல் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை சம்பவத்தன்று கைது செய்தனர். தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இது தொடர்புடைய நாகராஜை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மேலும் இதில் தொடர்புடைய சண்முகம், முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Muthukumar ,Annavasal Metu Street ,Rasathi ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் டிரைவர் பலி