காஞ்சிபுரம், ஏப்.13: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் `இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்’ வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளின் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க 15.4.2023 வரை முகாம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்’ வங்கி கணக்கு துவங்கி பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 7,899 மாணவ, மாணவிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம்,இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்’ வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5,511 மாணவர்களுக்கு வரும் 15ம்தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும்.
மேலும், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர் ஆகியோரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்’ வங்கி கணக்கை துவங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி இ-கேஓய்சி (விரல் ரேகை) மூலம் ஒருசில நிமிடங்களில்இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ்’ வங்கி கணக்கை துவங்க முடியும். எனவே, பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post ஆதிதிராவிடர் நலத்துறையின்
கல்வி உதவித்தொகை பெற பள்ளிகளில் சிறப்பு முகாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல் appeared first on Dinakaran.
