×

மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம்

வாழப்பாடி, ஏப்.13: வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம், புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர். வாழப்பாடி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சின்னகிருஷ்ணாபுரம் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு 2 நாட்களாக சிறப்பு வழிபாடு, அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்கள் வேல் அலகு குத்தியும், அக்னி, பூங்கரம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சியின், முதல் நாள் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று கோயில் முன்பு இருந்து தேரை வடம் பிடித்து இழுத்து நிலை கொண்டு வந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, வாழப்பாடி டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Mariamman ,temple ,procession ,Vazhappady ,Chinnakrishnapuram ,Pudupatti Mariamman temple ,Vazhapadi ,Mariamman temple ,
× RELATED கோவை தண்டு மாரியம்மன் கோயிலில்...