×

விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று திரும்பிய அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம், ஏப்.12: ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்த 4 அரசு பள்ளி மாணவ,மாணவிகளை கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகள் ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு மாணவர் அறிவியல் பேரவையின் சார்பாக வானவில் அறிவியல் விருதினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கி பாராட்டியதுடன், மேலும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டுமென தெரிவித்ததுடன், மாணவ,மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டினார். தொடர்ந்து மாணவர் அறிவியல் பேரவை செயலாளர் தெரிவிக்கையில், ‘‘அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளுக்கிடையே அறிவியல் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விஞ்ஞானிகள் மூலம் கருத்துரை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட திறனாய்வு போட்டியில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.சுதர்ஷினி, சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் டி.பாண்டியராஜன், பரமக்குடி, எஸ்.ஆர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் எஸ்.தரணிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று 6 நாள் பயிற்சி பெற்றனர். இவர்களை போல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இதுபோல் ஆராய்ச்சி தொடர்பான சுற்றுப்பயணம் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று திரும்பிய அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : research ,Ramanathapuram ,Harikota ,Space Research ,Center ,space research center ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்...