×

உரிமம் பெறாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

குளித்தலை, ஏப்.11: உரிமம் இல்லாமல் இயங்கும் செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என குளித்தலை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குளித்தலை நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகரன் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது. குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ 2000 மட்டும் ஆகும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி இந்நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும. நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

The post உரிமம் பெறாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் appeared first on Dinakaran.

Tags : Kuluthalai ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...