×

மகாராஷ்டிரா துணை முதல்வர் மனைவி அம்ருதாவை மிரட்டியவர் ஐபிஎல் சூதாட்டத்தில் கைது

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் பிரபல கிரிக்கெட் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானியை அமலாக்கத்துறை கைது செய்தது. மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா பட்னவிசுக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிஷா ஜெய்சிங்கானி ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன் ற போது கைதானார். இவர் பிரபல கிரிக்கெட் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானியின் மகள் என்பது தெரிய வந்தது. லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அனில் ஜெய்சிங்கானியையும் கைது செய்தனர். விசாரணையில் அனில் ஜெய்சிங்கானி 2015ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலும் தேடப்பட்டு வருபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஜாமீனில் வௌிவர முடியாத பிரிவின்கீழ் அனில் ஜெய்சிங்கானியை தற்போது அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

The post மகாராஷ்டிரா துணை முதல்வர் மனைவி அம்ருதாவை மிரட்டியவர் ஐபிஎல் சூதாட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Deputy Chief Minister ,Amrutha ,IPL ,New Delhi ,The Enforcement Directorate ,Anil Jaisinghani ,Maharashtra… ,Dinakaran ,
× RELATED பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்